டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக்
டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக்
டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக்
ADDED : ஜூலை 15, 2011 12:46 AM
கோபிசெட்டிபாளையம்: பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து கோபி சுற்று வட்டாரத்தில் வாடகை வாகன டிரைவர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீஸல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகை வாகனங்களில் வாடகை பழைய நிலையிலேயே உள்ளதால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட வேண்டி உள்ளது. பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி வாடகை வாகனங்களான ஆட்டோ, கார், லாரி, மினிடோர் வேன் உள்ளிட்ட வாகனங்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. வேலை நிறுத்தம் காரணமாக கோபி பஸ் ஸ்டாண்டில் உள்ள கார் ஸ்டாண்டில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. இதேபோல், கோபி, அஞ்சூர், நல்லகவுண்டன்பாளையம், நஞ்சுண்டன்பாளையம், மொடச்சூர் உள்பட 10க்கும் மேற்பட்ட இடத்தில் நேற்று வாடகை வாகன டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீஸல் விலை கட்டுப்படுத்த கோரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.