ADDED : ஜூலை 25, 2011 09:38 PM
பேரூர் : வக்கீல்களுக்கான தகுதித்தேர்வை ரத்துச் செய்யக்கோரி, சட்டமாணவர்கள் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எல்., பட்டம் பெற்றவர்கள், தங்கள் பெயரை பார் கவுன்சிலில் பதிவு செய்தபின், அவர்களை வழக்குகளில் வாதாட அனுமதிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில், பி.எல்., பட்டதாரிகள் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற புதிய முறையை அனைத்திந்திய பார் கவுன்சில், கடந்த ஆண்டு கொண்டுவந்தது. இத்தேர்வுகளை, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில், வக்கீல்களுக்கான தகுதித்தேர்வுகளை ரத்துசெய்யக்கோரி, கோவை சட்டகல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 150 மாணவர்கள் பங்கேற்றனர்.