Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெளியில் நிறுத்தப்பட்ட மாணவியர் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வெளியில் நிறுத்தப்பட்ட மாணவியர் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வெளியில் நிறுத்தப்பட்ட மாணவியர் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வெளியில் நிறுத்தப்பட்ட மாணவியர் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ADDED : அக் 15, 2011 01:07 AM


Google News
கரூர்: கரூர் அருகே பள்ளி மாணவிகளை வெளியில் நிற்க வைத்ததை கண்டித்து அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இனாம் கரூர் பெரிய குளத்துபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

கடந்த 12 ம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவிகள், திரு த்தப்பட்ட பேப்பரை பயிற்சி ஆசிரியரிடம் இருந்து வாங்கி கொண்டு தாமதமாக பள்ளிக்கு சென்றதால், அவர்களை வகுப்பாசிரியர் ஆப்சென்ட் போட்டு விட்டு, வெளியில் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 11 மணிக்கு 'சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அரசு பள்ளியை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:தேர்வு எழுதப்பட்ட விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தாமல், மாணவிகள் மூலம் திருத்துகின்றனர். இதனால் பள்ளிக்கு தாமதமாக சென்ற மாணவிகளை, ஒன்றரை மணி நேரம் வகுப்பாசிரியர்கள் வெளியில் நிறுத்தி ஆப்சென்ட் போட்டு விட்டனர்.பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவர்கள், மாணவிகளை மெ õபைல்ஃபோனில் படம் எடுத்துள்ளனர். அதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்ø ல. மாணவிகள் பிரச்சனை குறித் து புகார் கொடுக்க வந்தால் பள் ளி நிர்வாகத்தினர் எங்களை வெளி யே போ என மிரட்டுகின்றனர்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.பள்ளி முற்றுகையிடப்பட்டுள்ள தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., கௌரி உள்பட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன் பொதுமக்களிடம் கூறுகையில், ''இடைத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி பயிற்சி ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை திருத்த மாணவிகளை அனுமதிக்கவில்லை. விடைத்தாளை வாங்கி வந்ததால்தான், மாணவிகள் தாமதமாக வரநேரிட்டது என்பதால் 10 நிமிடத்தில் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்து விட்டோம். மாணவிகளை மொபைல்ஃபோனில் படம் எடுக்க கூடாது என மாணவர்களுக்கு ஏற்கனவே பிரேயரின் போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீறி செயல்படும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து பொதுமக்கள், 'மாணவிகளுக்கு பள்ளியில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கூறி அமைதியாக கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us