Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்

திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்

திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்

திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்

ADDED : அக் 06, 2011 01:09 AM


Google News
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 93 பேரும் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சி 2 மற்றும் 4 வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க.,வினர் திடீரென வாபஸ் பெற்றனர் திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.,- அ.தி. மு.க.,- காங்.,- பா.ம.க.,- தே.மு.தி.க., மற்றும் இரண்டுகள் சுயேச்சைகள் உட்பட 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு சுயேச்சை வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், இறுதி போட்டியில் 6 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்., கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத் தில் பா.ம.க.,-தே.மு.தி.க., வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளை பெற வாய்ப்புள்ளதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 93 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 16வது வார்டில் அதிகபட்சமாக 10 பேரும், ஐந்தாவது வார்டில் 8 பேரும் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் 5 முதல் 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதற்கிடையே 2 மற்றும் 4 வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர்கள் திடீரென மனுவை வாபஸ் பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us