Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாக்காளர்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்க நீயா...நானா... என போட்டி போடும் வேட்பாளர்கள்

வாக்காளர்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்க நீயா...நானா... என போட்டி போடும் வேட்பாளர்கள்

வாக்காளர்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்க நீயா...நானா... என போட்டி போடும் வேட்பாளர்கள்

வாக்காளர்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்க நீயா...நானா... என போட்டி போடும் வேட்பாளர்கள்

ADDED : அக் 03, 2011 12:49 AM


Google News

மதுரை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டசபை தேர்தலை மிஞ்சும் வகையில் 'தீபாவளி பரிசு' பெயரில் வேட்டி, சேலை, ஓட்டுக்கு ரூ.500 வரை கொடுத்து வாக்காளர்களை கவனிக்க துவங்கியுள்ளனர்.

யார் முதலில் கொடுப்பது என்ற போட்டி தற்போது வார்டுகளில் முக்கிய 'பிரச்னையாக' உள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் நிலையில், 'எப்படியும் நான் தான் வேட்பாளர்' என்று இப்போதே வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6.30 மணிக்கு பிரசாரத்தை துவங்கும் வேட்பாளர், செல்லும் வழியில் வாக்காளர்கள் கொடுக்கும் காபி, டீயை பருகி ஓட்டு சேகரிக்கின்றனர்.

வெயில் உக்கிரமாக இருப்பதால், காலை 11 மணிக்குள் வீதி பிரசாரத்தை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட சமுதாய மக்கள், சங்கங்களை பார்த்து ஆதரவு கேட்கும் திண்ணை பிரசாரத்தை வேட்பாளர்கள் பின்பற்றுகின்றனர். மதியம் ஒரு மணி முதல் மாலை மூன்று மணி வரை சிறிது ஓய்வு எடுக்கும் வேட்பாளர்கள், மீண்டும் மாலை 4 மணிக்கு களத்தில் குதித்து, இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே, செல்வாக்கை காண்பிக்க, சில வேட்பாளர்கள், வார்டுகளில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் சுயே., வேட்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் கட்சி சார்பில் 'சீட்' கிடைக்காமல், சுயேச்சையாக நிற்கின்றனர். வெற்றி பெறும் நோக்கத்தில் இவர்கள், பரிசுப் பொருட்கள் தருவது மற்றும் கட்சி வேட்பாளர் குறித்து தேர்தல் கமிஷனுக்கு மனு போடுவது என 'பகீரத' முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்றுமுன் தினம்கூட அவனியாபுரம் அருகே நெடுங்குளம் 7வது வார்டில் சுயே., வேட்பாளர் ராஜாகணேசன் ஆதரவாளர் ரஹீமிடமிருந்து 7 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செக்கானூரணி கே.புளியங்குளத்தில் 48 குவார்ட்டர் பாட்டில் சப்ளை செய்ய முயன்றதில் அ.தி.மு.க., இளைஞர் பாசறை வேட்பாளர் மதன்மோகனுக்கு தொடர்பு உண்டா? என விசாரணை நடக்கிறது. தேர்தலுக்கு இருவாரங்கள் உள்ள நிலையில் இப்போதே 'கவனிப்பு' தொடங்கி விட்டதில், வாக்காளர்களுக்கு இந்தாண்டு 'இரட்டை தீபாவளி' கொண்டாட்டம்தான்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us