/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுவர் விளம்பரம் செய்ய தடையால் வீட்டு உரிமையாளர்கள் நிம்மதி : வேட்பாளர்கள், மக்களிடமும் வரவேற்புசுவர் விளம்பரம் செய்ய தடையால் வீட்டு உரிமையாளர்கள் நிம்மதி : வேட்பாளர்கள், மக்களிடமும் வரவேற்பு
சுவர் விளம்பரம் செய்ய தடையால் வீட்டு உரிமையாளர்கள் நிம்மதி : வேட்பாளர்கள், மக்களிடமும் வரவேற்பு
சுவர் விளம்பரம் செய்ய தடையால் வீட்டு உரிமையாளர்கள் நிம்மதி : வேட்பாளர்கள், மக்களிடமும் வரவேற்பு
சுவர் விளம்பரம் செய்ய தடையால் வீட்டு உரிமையாளர்கள் நிம்மதி : வேட்பாளர்கள், மக்களிடமும் வரவேற்பு
ADDED : அக் 02, 2011 11:38 PM
வடமதுரை : உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிகளிலும் சின்னம் வரைய, சுவரொட்டி, பேனர்களுக்கு தேர்தல் கமிஷன் விதித்துள்ள தடை வேட்பாளர்கள், மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் மட்டும் தேர்தல் சின்னங்கள் வரையவும், சுவரொட்டிகளுக்கும் தடை செய்யப்பட்டிருந்தது.
ஊராட்சி பகுதிகளில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதி பெற்று சின்னங்கள் வரைய அனுமதி தரப்பட்டது. தற்போதைய உள் ளாட்சி தேர்தலில், ஊரா ட்சி பகுதிகளிலும் சின்னங்கள் வரைய தேர்தல் கமிஷன் தடைவிதித்துள் ளது. இதன் மூலம் வாக்காளரை நேரடியாக சந்தித்து துண்டு பிரசுரங்கள் மூலம் தங்களது சின்னங்களை தெரிவிக்க வேண்டிய நிலை வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பலம் வாய்ந்த வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை பெரிய அளவில், அதிக இடங்களில் சுவர் விளம்பரங்கள் மூலம் எழுதப்படும்போது, அந்த பகுதியில் அவர்களுக்கு அதிக ஆதரவு இருப்பது போன்று போலியான பிரமையை ஏற்படுத்தி வந்தனர். சின்னம் வரைய தடை செய்யதன் மூலம் அனைவருமே வாக்காளர்களை சந்தித்து நன்மதிப்பை பெற்றாமல் மட்டுமே ஓட்டுக்களை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு விதத்தில் வேட்பாளர்கள் மத்தியில் சமநிலைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாலும், வேட்பாளர்களின் செலவு குறையும் என்பதாலும், இந்த தடையை பல வேட்பாளர்களும் வரவேற்றுள்ளனர். பொது மக்களும் தெரிந்த வேட்பாளர் என்றால் சின்னம் வரைய சுவர் இல்லை என்று கூற முடியாமல் அனுமதித்த நிலையில் தற்போது யாரும் சுவர் வரைய அனுமதி கேட்டு வரமாட்டார்கள் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது. சின்னங்கள் வரைய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


