Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நிர்வாணமாக நடந்த இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பிய போலீசார்

நிர்வாணமாக நடந்த இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பிய போலீசார்

நிர்வாணமாக நடந்த இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பிய போலீசார்

நிர்வாணமாக நடந்த இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பிய போலீசார்

ADDED : செப் 30, 2011 11:59 PM


Google News

பல்லாவரம் : பல்லாவரத்தில், நள்ளிரவில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம் பெண்ணை, அவரது தாயுடன், போலீசார் அனுப்பிவைத்தனர்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரேமா (25).

(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதேபகுதியை சேர்ந்த, வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், அந்த வாலிபருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.இதனால், மன உளைச்சல் அடைந்த பிரேமா, காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வந்தவாசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். ஆனால், இதற்கு சாத்தியமில்லை என்று கூறி, பிரேமாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.இதன் பின், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், பம்மலில் உள்ள சகோதரி வீட்டிற்கு அனுப்பிவைத்தால், அவர் மனம் மாற வாய்ப்புள்ளது என்று கருதிய அவரது பெற்றோர், பிரேமாவை பம்மலுக்கு அனுப்பி வைத்தனர்.சகோதரி வீட்டில் தங்கியிருந்த பிரேமா, 27ம் தேதி நள்ளிரவு பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நிர்வாண நிலையில் நடந்து சென்றுள்ளார்.ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்லாவரம் போலீசார், பெண் போலீஸ் உதவியுடன் அவரை மடக்கி பிடித்தனர்.பின், பிரேமாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்,காதலனை சேர்த்து வைக்குமாறு பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், போலீசாரின் கவனத்தை ஈர்க்கவே, இரவில் நிர்வாணமாக நடந்து சென்றேன் என பிரேமா கூறினார்.இதையடுத்து, அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், பிரேமாவின் தாய் மற்றும் சகோதரியை வர வைத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us