/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/தனியார் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்தனியார் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
தனியார் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
தனியார் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
தனியார் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 30, 2011 11:59 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தனியார் கல்லூரிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் மிரட்டல் நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மணலூர் பேட்டை சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அறிவியல் மற்றும் கலை கல்லூரிக்கு கடந்த 22ம் தேதி ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, போலீஸார் சோதøணீ நடத்தியதில் அது புரளி என தெரிந்தது, கடந்த 26ம் தேதி மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அப்போது சோதனை நடத்தியதிலும் புரளி என தெரியவந்தது. மூன்றாவது முறையாக கல்லூரிக்கு மீண்டும் ஃபோன் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று பகல் 11 மணியில் இருந்து 12மணிக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் ஃபோன் மூலம் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் நேற்று மீண்டும் கல்லூரி முழுவதும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினர். சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது.சோதனைக்கு டி.எஸ்.பி., ரமேஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கல்லூரிக்கு வெவ்வெறு வெளிநாடுகளில் இருந்து மாறுபட்ட எண்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி இந்த மிரட்டல் விடுக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர், கல்லூரி அலுவலகம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் என இவை அனைத்துக்கும் ஒரே நபர்தான் மிரட்டல் விடுத்து வருகிறார். அந்த நபரை பிடிக்க நவீன தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி வருகிறோம், குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். விரைவில் பிடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


