/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொண்டலாம்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு குறைவுவேட்பு மனு பெறுவது 1 மணி நேரம் நிறுத்தம்கொண்டலாம்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு குறைவுவேட்பு மனு பெறுவது 1 மணி நேரம் நிறுத்தம்
கொண்டலாம்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு குறைவுவேட்பு மனு பெறுவது 1 மணி நேரம் நிறுத்தம்
கொண்டலாம்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு குறைவுவேட்பு மனு பெறுவது 1 மணி நேரம் நிறுத்தம்
கொண்டலாம்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு குறைவுவேட்பு மனு பெறுவது 1 மணி நேரம் நிறுத்தம்
ADDED : செப் 30, 2011 02:33 AM
சேலம்: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாளான நேற்று,
மண்டல அலுவலகங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படாததால், வேட்பாளர்கள்
மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் அவதியை சந்தித்தனர். கொண்டலாம்பட்டி மண்டல
அலுவலகத்தில், கூட்ட நெரிசல் காரணமாக, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வேட்பு
மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.சேலத்தில் மாநகாட்சி அலுவலகம்,
அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மண்டல
அலுவலகங்களில், உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.வேட்பு
மனுத் தாக்கலின் கடைசி நாளான நேற்று, கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் ஒரே
நேரத்தில் வேட்பு மனுத்தாக்கலில் ஈடுபட்டன. காலை, 11 மணிக்கு வேட்பு
மனுத்தாக்கல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், 10 மணி முதலே கட்சியினர்
மண்டல அலுவலங்களில் கூட துவங்கினர். அதற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்படாதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ராட்டில் தாதகாப்பட்டி
கேட், அம்மாபேட்டை மண்டல அலுவலகம் முன், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன்
என, ஆங்காங்கே போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.சேலம் மாநகாரட்சி
கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நேற்று, தி.மு.க.,- அ.தி.மு.க.,-
பா.ம.க.,- பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி
சுயேட்சையாகவும் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில், 45, 46, 47, 48,
49, 50, 51, 52 ஆகிய வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை உதவி கமிஷனர்
(பொறுப்பு) ஜெகநாதன் பெற்றார். மேலும், 53, 54, 55, 56, 57, 58, 59, 60
ஆகிய வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை உதவி வருவாய் அலுவலர் குமார்
பெற்றார். ஒரே நேரத்தில் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்ததால்,
தொண்டர்கள் அனைவரும் மண்டல அலுவலக வளாகத்தில் குவிந்து
இருந்தனர்.இந்நிலையில், பகல், 11.30 மணி அளவில், 58வது வார்டில்
சுயேட்சையாக போட்டியிடும் கறிக்கடை பழனி, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன்
ஊர்வலமாக மண்டல அலுவலகத்துக்குள் நுழைந்தார்.இதனால், கூட்ட நெரிசல்
அதிகரித்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களுடன் வந்தவர்கள்
கொண்டலாம்பட்டி அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களிலும், கட்டடங்களின் மேற்
கூரைகளிலும் நின்றனர். வளாகத்தில், கூட்ட நெரிசலை மாநகராட்சி அலுவலர்களால்
கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரே நேரத்தில் வேட்பாளர்களுடன் தொண்டர்களும்
வந்ததால், அதிகாரிகள் வேட்பு மனுக்களை பெற இயலவில்லை. இதனால், 11.30 மணி
முதல், 12.30 மணி வரை வேட்பு மனு பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இது
குறித்து, அதிகாரிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.அன்னதானப்பட்டி
இன்ஸ்பெக்டர் கண்ணன், சோமராஜன் தலைமையில் போலீஸார் மண்டல அலுவலகத்துக்கு
வந்து, அங்கு இருந்த தொண்டர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அதன் பின்,
வேட்பு மனு பெறும் பணி துவங்கியது. தொடர்ந்து, போலீஸார் வேட்பு மனு தாக்கல்
செய்ய வந்த வேட்பாளர்களுடன் ஐந்து பேரை மட்டுமே அனுமதித்ததால், வேட்பு மனு
தாக்கல் சிரமம் இன்றி நடந்தது.வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு, மாநகராட்சி
அலுவலகத்துக்கு மட்டுமே அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு
இருந்தது. மண்டல அலுவலகங்களுக்கு தேவையான பாதுகாப்பை போலீஸார் வழங்க
வில்லை. இதன் காரணமாகவே, மண்டல அலுவலகங்களின் முன் பகுதியில் கடும் நெரிசல்
ஏற்பட்டுள்ளது.