/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடியில் வங்கியில் இருமுறை கொள்ளை முயற்சி: ஒருவர் கைதுபரமக்குடியில் வங்கியில் இருமுறை கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
பரமக்குடியில் வங்கியில் இருமுறை கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
பரமக்குடியில் வங்கியில் இருமுறை கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
பரமக்குடியில் வங்கியில் இருமுறை கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
ADDED : செப் 30, 2011 01:04 AM
பரமக்குடி : பரமக்குடி இந்தியன் வங்கியில் இருமுறை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி இந்தியன் வங்கியில் செப்., 24 மாலை 6 மணிக்கு மாடிக்கதவு அருகே குருவிப்பொட்டலை சேர்ந்த டேவிட், 25 பதுங்கி இருந்தார். வங்கி ஊழியர் ஒருவர் கேட்டபோது, பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேவிட் போலீசில் கொடுத்த வாக்குமூலம்: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே' எவரெஸ்ட் எம்ப்ளாயின்ட்மென்ட் நிறுவனம்' நடத்தி வருகிறேன். சம்பாதித்த பணத்தை, 'ஆன்லைன்' வர்த்தகத்தில் தொலைத்து விட்டேன். இரு சகோதரிகளின் திருமணம் மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக திருட முயற்சித்தேன். செப்.,5ம் தேதி இதே வங்கி லாக்கரை உடைக்க முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் மதுரை சென்று அதற்குரிய கருவிகளை வாங்கி மீண்டும் திருட முயற்சித்த போது பிடிபட்டேன் என தெரிவித்தார். வங்கி மேலாளர் ரத்தினவேலு புகார்படி, டேவிட்டை, பரமக்குடி போலீசார் கைது செய்து, ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.