ADDED : செப் 29, 2011 11:11 PM
கோவை : நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு குடும்ப சந்திப்பு விழா, நாளை அக்.,1 மாலை 5 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டலில் நடக்கிறது.நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக்கல்லூரி கோவை பிரிவு செயலாளர் ராம் விஜி கூறியதாவது: ஸ்காட் கிறிஸ்துவக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு குடும்ப சந்திப்பு விழா, நாளை மாலை 5 மணிக்கு காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்கின்றனர். சங்க செயலாளர் ஜேம்ஸ் டேனியல் தலைமை வகிக்கிறார். பொருளாளர் மோகன்தாஸ், கோவை பிரிவு தலைவர் உமாதாணு, செயலாளர் ராம் விஜி, பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில், முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. அடுத்தாண்டுக்கான சங்க நிகழ்ச்சிகள், விழாக்கள் பற்றி விவாதித்து முடிவு செய்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.