/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/தி.மு.க., தயக்கம் கம்யூ., மகிழ்ச்சிதி.மு.க., தயக்கம் கம்யூ., மகிழ்ச்சி
தி.மு.க., தயக்கம் கம்யூ., மகிழ்ச்சி
தி.மு.க., தயக்கம் கம்யூ., மகிழ்ச்சி
தி.மு.க., தயக்கம் கம்யூ., மகிழ்ச்சி
ADDED : செப் 28, 2011 11:54 PM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி யூனியனில் 16 வார்டுகள் உள்ளன.
கூட்டணிகள் மாறினாலும் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே அதிக இடங்களை பெற்று தலைவர் பதவியையும் தக்க வைத்து வந்தது. தற்போதைய தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்வத்தோடு போட்டியிட தயாராகி வருகின்றனர். அதிக இடங்களை நாங்களே பிடிப்போம் என்றும் மார்தட்டி வருகின்றனர். ஆனால் இந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. நிர்வாகிகள் கூறியும் கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர். மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து வார்டு, மாவட்ட பஞ்சாயத்து பொறுப்புகளுக்கும் இன்றாவது மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி யூனியனின் 16 வார்டுகளுக்கும் நேற்று வரை 26 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


