/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தொடர்ந்து மக்கள் பணியால் வெற்றி உறுதி என்கிறார்தொடர்ந்து மக்கள் பணியால் வெற்றி உறுதி என்கிறார்
தொடர்ந்து மக்கள் பணியால் வெற்றி உறுதி என்கிறார்
தொடர்ந்து மக்கள் பணியால் வெற்றி உறுதி என்கிறார்
தொடர்ந்து மக்கள் பணியால் வெற்றி உறுதி என்கிறார்
ADDED : செப் 28, 2011 11:40 PM
சிவகங்கை : சிவகங்கை 5 வது வார்டு கவுன்சிலருக்கு காங்., சார்பில் போட்டியிடும் ஆர்.மோகன்ராஜ் மனுதாக்கல் செய்தார்.அவர் கூறுகையில்,'' எனது வார்டில் உள்ள அனைவரிடமும் சகோதர பாசத்துடன் பழகி வருவதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன்.பொது மக்கள் வீடுகளில் நடைபெறும் அனைத்து காரியங்களிலும் கலந்து கொள்வதால் எனக்கு ஆதரவு உள்ளது.பெண்கள் திருமண உதவி,மகப்பேறு,மத்திய அரசின் கல்வி உதவிதொகை திட்டம் உள்ளிட்டவை கிடைக்க செய்துள்ளேன்.
வார்டு முழுவதும் சிமென்ட் சாலை, இலவச டிவி, இலவச காஸ் அடுப்பு, அரசு காப்பீடு, மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை பென்ஷன் என அரசின் திட்டங்கள் கிடைக்க பாடுபட்டுள்ளேன். மண்சாலையாக இருந்த காந்தி வீதி, நீதிபதி ராஜசேகரன் சாலை தார்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் எம்.பி., நிதியில் இருந்து இரண்டு ஆழ்துளை கிணற்றிற்கு நிதி பெறப்பட்டுள்ளது. மக்கள் சேவை செய்வதால் 4 வது முறையாக வெற்றி நிச்சயம்,'' என்றார்.


