அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்
அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்
அரசு ஐ.டி.ஐ.,களில் சேர 30ம் தேதி வரை அவகாசம்
ADDED : செப் 27, 2011 11:26 PM
சென்னை: அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில், காலியாக உள்ள இடங்களில், வரும் 30ம் தேதி வரை மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் பன்னீர் செல்வம் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், அரசுக்குச் சொந்தமான, ஐ.டி.ஐ.,கள் உள்ளன. இதில், பட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மெக்கானிக்கல், இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பரிவுகளில், அதிகளவில் காலி இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள், அரசு ஐ.டி.ஐ.,களுக்கு நேரில் சென்று சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு, பன்னீர் செல்வம் கூறினார்.