ADDED : செப் 14, 2011 12:59 AM
திருப்பூர்:திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப், குமரன் மருத்துவமனை,
லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்,
கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்தது.லயன்ஸ் கிளப் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
வட்டார தலைவர் மனோகரன்,
பொன்னுசாமி, செயலாளர்கள் பிரதீப்குமார், ரங்கசாமி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.கண் சிகிச்சை முகாமில், 187 பேர் பங்கேற்றனர். 15 பேர்,
கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து, கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொது மருத்துவ முகாமில் 105 பேர் பங்கேற்றனர்.முகாம் ஏற்பாடுகளை லயன்ஸ்
கிளப் நிர்வாகிகள் கணேசமூர்த்தி, ரமேஷ் குமார் செய்திருந்தனர்.