Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சமையல் எண்ணெய்களில் கலப்படம் கொடிய நோய் ஏற்படும் ஆபத்து

சமையல் எண்ணெய்களில் கலப்படம் கொடிய நோய் ஏற்படும் ஆபத்து

சமையல் எண்ணெய்களில் கலப்படம் கொடிய நோய் ஏற்படும் ஆபத்து

சமையல் எண்ணெய்களில் கலப்படம் கொடிய நோய் ஏற்படும் ஆபத்து

ADDED : செப் 13, 2011 12:14 AM


Google News

தூத்துக்குடி : சமையல் எண்ணெய்களில் கலப்படம் அதிகரித்து வருவதால் கொடிய நோய் வரும் என்று வேளாண்மைத்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி வேளாண்மை வணிக துணை இயக்குனர் முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தற்போது சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தாவர எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் முதலியவற்றில் கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது.'அர்ஜிமோன் மெக்சிகனா' என்ற தாவரத்தின் விதையிலிருந்து கிடைக்கும் அர்ஜிமோன் எண்ணெய் மேற்கண்ட எண்ணெய் வகைகளுடன் கலப்படம் செய்யப்படுகிறது. அர்ஜிமோன் மெக்சிகனா எண்ணெய் கலப்படம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தி சமைத்து உண்பவர்களுக்கு கிளாகோமா என்று அழைக்கப்படும் கண்நோய், இதய அடைப்பு மற்றும் எபிடெமிக் டிராப்சி முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. மாநில அக்மார்க் ஆய்வகங்களில் அர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் கண்டறிய தனியாக சோதனைகள் செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அக்மார்க் திட்டத்தின்கீழ் தரச்சான்று பெற்று சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சுத்தமான, கலப்படமற்ற, தரமான தாவர எண்ணெய்கள் மற்றும் கடுகு ஆகியவற்றை பயன்படுத்தினால் நோயற்ற நல வாழ்வினை பெறலாம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us