/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/லாரி மோதி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்லாரி மோதி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்
லாரி மோதி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்
லாரி மோதி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்
லாரி மோதி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : செப் 12, 2011 11:37 PM
திருப்போரூர் : தாழம்பூர் அருகே, மண் லாரி மோதி பள்ளிச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாணவனின் உடலோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர். தாழம்பூர் அடுத்த போலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரின் மகன் அஜித்குமார்,13. மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 4.30 மணிக்கு, பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்குப் புறப்பட்டான். மாம்பாக்கம் ஈஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, மாம்பாக்கம் ஏரியில் மண் எடுக்கச் சென்ற லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவன் மீது மோதியது. பலத்த காயமடைந்த மாணவன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். அதைக் கண்டு, அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். ஏரியில் மண் எடுக்க வரும் லாரிகளால், அதிக விபத்துகள் நடக்கின்றன. எனவே, ஏரியில் மண் எடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மாணவன் மீது மோதிய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவனின் உடலோடு, மாம்பாக்கம்-மேடவாக்கம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


