ADDED : செப் 11, 2011 12:36 AM
கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் இன்று 'உலக சகோதர தினம்' கொண்டாடப்படுகிறது.
'எழுமின் விழுமின்' என்ற அறைகூவலோடு இளைஞர்களுக்கு உத்வேகமூட்டியவர் சுவாமி விவேகானந்தர். கடந்த 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமேரிக்காவின் சிகாகோவில் நடந்த சாதுக்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் மாபெரும் உரை நிகழ்த்தி மங்கா புகழ்பெற்றார். இவர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள கடற்பாறைக்கு நீந்தி சென்று 3 நாட்கள் கடும் தியானம் மேற்கொண்டார். இதன் நினைவாக அங்கு அவருக்கு கடந்த 41 ஆண்டுகளுக்கு முன் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இதன் 41வது ஆண்டு நிறைவுவிழா மற்றும் உலக சகோதரதின விழா இன்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயத்தில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு நடக்கும் விழாவிற்கு கேந்திர பொருளாளர் அனுமந்திராவ் தலைமை வகிக்கிறார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சசிகலா, பழவிளை காமராஜர் கல்வியியல் கல்லூரி முதல்வர் விஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.