Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாக்காளர்கள் வார்டு மாற்றம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

வாக்காளர்கள் வார்டு மாற்றம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

வாக்காளர்கள் வார்டு மாற்றம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

வாக்காளர்கள் வார்டு மாற்றம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ADDED : செப் 10, 2011 02:06 AM


Google News
திருப்பூர் : சாமளாபுரம் பேரூராட்சியில் 15வது வார்டு வாக்காளர் களின் பெயர்கள் வேறு வார்டுகளில் இடம் பெற்றுள்ளதால், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

சாமளாபுரம் பேரூராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கள்ளப்பாளையம் மற்றும் செந்தேவிபாளையம். இப்பகுதியில் 1,350க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள் ளனர். கள்ளப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 850 வாக்காளர்கள் பெயர் இந்த வார்டில் இல்லை. இப்பகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத, 2 கி.மீ., தொலைவில் உள்ள 13 மற்றும் 14வது வார்டுகளை உள்ளடக்கிய கருகம்பாளையம் பகுதியில் இவர்களது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.இப்பகுதியினர் கூறியதாவது:எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தேர்தல் என்றால் பரவாயில்லை. ஆனால், வார்டு தேர்தலில் வார்டு மாறி ஓட்டுப் போடுவது வீண் வேலை. எங்களது வார்டு ஓட்டுகள் 13 மற்றும் 14வது வார்டுகளில் உள்ளன. ஓட்டுப்போடாமல் விடக்கூடாது என்று ஓட்டுப்பதிவு செய்தால், எங்கள் பகுதிக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் வார்டு கவுன்சிலரால் கொண்டு வர முடியவில்லை. வார்டுப் பிரச்னையால் எந்த கவுன்சிலரையும் அணுக முடியாத நிலை உள்ளது. வார்டு மாறிய ஓட்டுகள் குறித்து பலமுறை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஆர்.டி.ஓ., - தாசில்தார் என தொடர்ந்து புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை. எங்கள் ஓட்டுகள் 15வது வார்டுக்கு மாற்றப்படவில்லை என்றால், வரும் தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us