/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மதுரை கோட்டத்தில் முதல் மின்சார ரயில் இயக்கம்மதுரை கோட்டத்தில் முதல் மின்சார ரயில் இயக்கம்
மதுரை கோட்டத்தில் முதல் மின்சார ரயில் இயக்கம்
மதுரை கோட்டத்தில் முதல் மின்சார ரயில் இயக்கம்
மதுரை கோட்டத்தில் முதல் மின்சார ரயில் இயக்கம்
ADDED : செப் 06, 2011 10:11 PM
திண்டுக்கல் : மதுரை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக, வைகை எக்ஸ்பிரஸ், நேற்று திண்டுக்கல்லில் இருந்து மின்சார இன்ஜின் மூலம் சென்னைக்கு இயக்கப்பட்டது.
வைகை எக்ஸ்பிரஸ் நேற்று மதுரையிலிருந்து டீசல் இன்ஜின் மூலம் திண்டுக்கல்லுக்கு காலை 7.53 க்கு வந்து சேர்ந்தது. இங்கு டீசல் இன்ஜின் மாற்றப்பட்டு, மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டது. மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், சீனியர் டெக்னீசியன் பாண்டியன், சீனியர் டிவிஷனல் இன்ஜினியர் அனில்குமார் பாஜியார் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். மதுரை கோட்டத்தில் இருந்து முதல் மின்சார ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்றது. நிகழ்ச்சியில், சீனியர் ஆப்பரேட்டிங் மேனேஜர் ரகுராமன், சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியர் முகுந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பாண்டியன், நெல்லை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மதுரை-விழுப்புரம் பாசஞ்சர் ரயில் ஆகியவை திண்டுக்கல்லில் இருந்து இனி, மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படவுள்ளது.கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் வெங்கட சுப்பிரமணி கூறுகையில், 'டிசம்பரில் மதுரை வரை மின்மயமாக்கல் பணி முழுமையடைந்துவிடும். அதன்பின், தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும், மதுரையிலிருந்து மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும், என்றார்.