ADDED : செப் 02, 2011 11:04 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் என்.ஆர்.எச்.எம்., சார்பில் பச்சிளம், சிறுவர்களின் நோய்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் ராஜா பயிற்சியளித்தார். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:கோலார்ப்பட்டி பிளாக்கிற்குட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, கோலார்ப்பட்டி, கஞ்சம்பட்டி போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பிறந்த 28 நாட்களுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிவதற்கான பயிற்சியாக இது அமைந்துள்ளது என்றனர்.
நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிபொள்ளாச்சி : பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை காரணமாக கோவை ரோட்டில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ரோட்டில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதிகளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.