/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இருகூர் குட்செட்டுக்கு வந்த மக்காசோளம் :போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் சென்றனஇருகூர் குட்செட்டுக்கு வந்த மக்காசோளம் :போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் சென்றன
இருகூர் குட்செட்டுக்கு வந்த மக்காசோளம் :போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் சென்றன
இருகூர் குட்செட்டுக்கு வந்த மக்காசோளம் :போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் சென்றன
இருகூர் குட்செட்டுக்கு வந்த மக்காசோளம் :போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் சென்றன
ADDED : ஆக 22, 2011 11:11 PM
சூலூர் : இருகூர் கூட்செட்டில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் 2600 டன் மக்காச்சோளம், லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூல், டீசல் விலை மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சூலூர் அடுத்த இருகூர் ரயில்வே குட்செட்டில் போலீஸ் பாதுகாப்புடன் சரக்குகள் கடந்த இரு நாட்களாக கையாளப்பட்டன. வடமாநிலத்தில் இருந்து, உடுமலையில் உள்ள தனியார் கோழித்தீவன நிறுவனத்துக்கு 2600 டன் மக்காச்சோளம் கூட்ஸ் ரயிலில் நேற்று முன்தினம் இருகூர் வந்தது. கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் இந்த மக்காச்சோளம், சிறப்பு அனுமதியுடன் நேற்று முன்தினம் முதல் போலீஸ் பாதுகாப்புடன் ரயிலில் இருந்து இறக்கி 50க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டன.


