/உள்ளூர் செய்திகள்/சென்னை/25 ஆண்டுகள் கழித்து இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்25 ஆண்டுகள் கழித்து இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
25 ஆண்டுகள் கழித்து இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
25 ஆண்டுகள் கழித்து இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
25 ஆண்டுகள் கழித்து இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
ADDED : ஆக 22, 2011 02:09 AM
சென்னை : இயந்திரமயமான வாழ்க்கையில், பயணித்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொருவரும், இன்றைய காலகட்டத்தில், கடந்த கால நினைவுகளைத் திரும்பிப்
பார்ப்பது, சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், அதையும் மீறி,
தற்போது சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், 25 ஆண்டுகள் கழித்து,
'பிரிவுக்குப் பின், மீண்டும் ஒன்று சேரும்' நிகழ்ச்சியில்
பங்கேற்றனர்.சென்னை மருத்துவக் கல்லூரியில், 1986-92ல் படித்த மாணவர்கள்,
25 ஆண்டுகள் 'பிரிவுக்குப் பின் ஒன்று சேரும்' நிகழ்ச்சி, மருத்துவக்
கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், அப்போது படித்த
மாணவர்கள் மற்றும் பணியாற்றிய பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில்,
மாணவர்கள் தங்களுக்குக் கற்றுக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவித்து,
ஒருவரையொருவர் சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.இது
குறித்து, பழைய மாணவர்களில் ஒருவரான, டாக்டர் ரவி பாபு கூறும்போது,
''சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்கள், 25 ஆண்டுகள் கழித்து,
ஒருவரையொருவர் சந்திக்கிறோம். எங்களுடன் படித்த மாணவர்கள் மற்றும்
பேராசிரியர்களைச் சந்தித்து, பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொள்ள,
இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியது. மேலும், இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதை, பெருமையாகக் கருதுகிறேன்'' என்றார்.இந்நிகழ்ச்சியில், சென்னை
மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களாக, அப்போது பணியாற்றிய, எம்.ஜி.ஆர்.,
பல்கலை துணைவேந்தர் மயில் வாகனன், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்
கனகசபை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கீதா லட்சுமி
மற்றும் பழைய மாணவர்கள் அன்புமணி ராமதாஸ், விநாயகா மெடிக்கல் மிஷன்
இணைவேந்தர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


