/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விநாயகர் சிலை செய்யும் பணிகள் செஞ்சியில் இரு இடங்களில் தீவிரம்விநாயகர் சிலை செய்யும் பணிகள் செஞ்சியில் இரு இடங்களில் தீவிரம்
விநாயகர் சிலை செய்யும் பணிகள் செஞ்சியில் இரு இடங்களில் தீவிரம்
விநாயகர் சிலை செய்யும் பணிகள் செஞ்சியில் இரு இடங்களில் தீவிரம்
விநாயகர் சிலை செய்யும் பணிகள் செஞ்சியில் இரு இடங்களில் தீவிரம்
ADDED : ஆக 15, 2011 11:26 PM
செஞ்சி : செஞ்சி பகுதியில் இரு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா செப்.1ம் தேதி நடக்க உள்ளது. செஞ்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் பெரிய சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு முதன் முறையாக விநாயகர் சிலைகளை செஞ்சி பகுதியில் செய்ய துவங்கி உள் ளனர். செஞ்சி அருகே செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் அருகிலும், செஞ்சி -திண்டிவனம் சாலையில் ஊரணித்தாங்கல் கிராமத்திலும் விநாயகர் சிலைகளை செய்கின்றனர். சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காகித கூழ், மரவெள்ளி கிழங்கு மாவு, மைதா கொண்டு 4 முதல் 13 அடி வரையிலான விநாயகர் சிலைகளை செய்கின்றனர். இவற்றிற்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். வெளியூர்களுக்கு சென்று சிலைகளை வாங்கி வந்த செஞ்சி பக்தர்களுக்கு அருகில் விநாயகர் சிலை கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.