/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நகராட்சி பயணிகள் தங்கும் விடுதி தனித்தனியாக ஏலம் விட கோரிக்கைநகராட்சி பயணிகள் தங்கும் விடுதி தனித்தனியாக ஏலம் விட கோரிக்கை
நகராட்சி பயணிகள் தங்கும் விடுதி தனித்தனியாக ஏலம் விட கோரிக்கை
நகராட்சி பயணிகள் தங்கும் விடுதி தனித்தனியாக ஏலம் விட கோரிக்கை
நகராட்சி பயணிகள் தங்கும் விடுதி தனித்தனியாக ஏலம் விட கோரிக்கை
ராசிபுரம்: 'நகராட்சிக்கு சொந்தமான பயணிகள் தங்கும் விடுதியை, தனித்தனி அறையாக ஏலம் விடவேண்டும்' என, ராசிபுரம் ம.தி.மு.க., நகரச் செயலாளர் ஜோதிபாசு வலியுறுத்தியுள்ளார்.
ராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி, பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட விடுதியில், 11 அறைகள் உள்ளன. அந்த கட்டிடம், கடந்த, 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் பாழடைந்து காணப்படுகிறது.
நகராட்சி ஏலம் விடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டும், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், அந்த அறைகளை தனித்தனியாக ஏலம் விடுவதற்கு, கடந்த ஜூன் 27ம் தேதி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, ஜூலை 27ம் தேதி நடந்த கூட்டத்தில், அனைத்து அறைகளையும் ஒரு நபரே ஏலம் எடுக்கும் வகையில் தீர்மானத்தை மாற்றினர்.
ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஒரு நபரே பயன் அடையும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்; நகராட்சியின் தங்கும் விடுதி அறைகளை தனித்தனியாக ஏலம் விட்டால் மட்டுமே அனைவரும் பயனடைய முடியும்; தனித்தனி அறையாகவே ஏலம் விடவேண்டும்' என, ம.தி.மு.க., நகரச் செயலாளர் ஜோதிபாசு வலியுறுத்தியுள்ளார்.