மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஆக 05, 2011 12:57 AM
சென்னை : வங்கி அதிகாரி பணிக்கான பொதுத் தேர்வுக்கு, மனிதநேயம் அறக்கட்டளை சார்பில், இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
அகில இந்திய அளவில், வங்கி அதிகாரி பணிக்கான பொதுத் தேர்வு, செப். 18ம் தேதி, நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கு பயிற்சிபெற விரும்பும் மாணவர்களுக்கு, எழுத்து மற்றும் நேர்காணல் தேர்விற்கான பயிற்சியை, சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கல்வியகம், இலவசமாக அளிக்க உள்ளது.
மையத்தின் ஒருங்கினைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் கூறுகையில், ''இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தீதீதீ.ண்ச்டிஞீச்டிண்.ஞிணிட் என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம், 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை-600 035 என்ற முகவரியில் உள்ள மையத்திற்கு நேரில் வந்தோ, பதிவு செய்து கொள்ளலாம்,'' என்றார்.