/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்
ADDED : ஆக 03, 2011 10:02 PM
சிறுபாக்கம் : காட்டுமயிலூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு எம்.
எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார். வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயராமன், மாரியப்பன் உட்பட 5 பேரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதனைத்தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துகுமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் உதவித்தொகை, வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, பிரபாகரன், தேவசினேகம், கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஊராட்சி தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., சிவானந்தம், கவுன்சிலர் சேகர் உடனிருந்தனர்.