விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது ஜெ., தாக்கு
விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது ஜெ., தாக்கு
விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது ஜெ., தாக்கு
ADDED : ஆக 03, 2011 04:28 PM
சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையை திறந்து வைத்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்த அவர், தமிழகத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதாகவும் கூறினார். விலைவாசி உயர்வு குறித்து பார்லிமென்ட்டில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்து வரும் வேளையில், ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.