Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர்-அரவக்குறிச்சி பஸ் இயக்க பாரதிய மஸ்தூர் சங்கம் தீர்மானம்

கரூர்-அரவக்குறிச்சி பஸ் இயக்க பாரதிய மஸ்தூர் சங்கம் தீர்மானம்

கரூர்-அரவக்குறிச்சி பஸ் இயக்க பாரதிய மஸ்தூர் சங்கம் தீர்மானம்

கரூர்-அரவக்குறிச்சி பஸ் இயக்க பாரதிய மஸ்தூர் சங்கம் தீர்மானம்

ADDED : ஜூலை 28, 2011 02:38 AM


Google News

கரூர்: கரூர் பாரதீய மஸ்தூர் சங்க ஸ்தாபக விழா மாவட்ட தலைவர் துரைரவி தலைமையில் வெங்கமேட்டில் நடந்தது.

கூட்டத்தில், நாட்டில் லஞ்சம், ஊழல், மத்தியில் தரமற்ற ஆட்சி நடத்தும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்குதல், தொழிலாளர் நலவாரியம் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட சலுகையை வழங்குதல்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு 1,000 ரூபாய் அரசு அறிவித்ததை வாரிய அட்டை பெற்றவர்களுக்கும் வழங்குதல், மகப்பேறு உதவியை தேர்தலில் அறிவித்தப்படி 12 ஆயிரம் ரூபாயாக அறிவித்தல், வாரிய அட்டை பெற்றவர்களுக்கு விபத்து மரண உதவி இரண்டு லட்ச ரூபாயாகவும், இயற்கை மரணத்துக்கு ஒரு லட்சமாகவும் அறிவித்தல், கரூர் - அரவக்குறிச்சி இடையே தொடர் பஸ் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன், பொருளாளர் பன்னீர் ö சல்வம், கட்டுமான சங்க துணை தலைவர்கள் ஆனந்தராஜ், கதிர்வேல், மகிலா அமைப்பு நிர்வாகிகள் புவனேஸ்வரி, சாந்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கணேசன், ரவி, ஆறுமுகம், சின்னதுரை பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us