Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மீனவ கிராமங்களில் விற்க கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் சிக்கின: இருவர் கைது

மீனவ கிராமங்களில் விற்க கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் சிக்கின: இருவர் கைது

மீனவ கிராமங்களில் விற்க கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் சிக்கின: இருவர் கைது

மீனவ கிராமங்களில் விற்க கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் சிக்கின: இருவர் கைது

ADDED : ஜூலை 13, 2011 11:24 PM


Google News

புழல் : மீனவ கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்க, கடத்தி வரப்பட்ட வெளி மாநில மதுபானங்கள் சிக்கியது.

இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த செங்குன்றம், சோழவரம் பகுதிகள் வழியாக பழவேற்காடு மீனவ கிராமங்களில் விற்க, வெளிமாநில மதுபானங்கள் கடத்தப்படுவதாக, புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், ஏ.டி.எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், மாதவரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கிய 760 குவாட்டர் மதுபாட்டில்களுடன் சென்ற ஷேர் ஆட்டோவை மாதவரம் மது விலக்கு போலீசார், திருவள்ளூர் கூட்டுச் சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவில் இருந்த பழவேற்காடு பாபனார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார், 41, பெரிய தெருவைச் சேர்ந்த கார்த்திக், 35 ஆகியோரை கைது செய்தனர். குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 280 பிராந்தி மற்றும் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, பழவேற்காட்டிற்கு அருகில் உள்ள மீனவ கிராமங்களில், கூடுதல் விலைக்கு விற்க, படகு மூலம் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிந்தது. மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஷேர் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 1.5 லட்ச ரூபாய். போலீசார் விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us