புதிய வடிவில் மருத்துவ காப்பீட்டு திட்டம்
புதிய வடிவில் மருத்துவ காப்பீட்டு திட்டம்
புதிய வடிவில் மருத்துவ காப்பீட்டு திட்டம்
ADDED : ஜூலை 11, 2011 11:29 AM
சென்னை: தமிழகத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த தி.மு.க., ஆட்சியின் போது கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தற்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி, 4 ஆண்டுகளில் ஒரு குடும்பம் 4 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகள் பெறமுடியும். பரிசோதனை, அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப்பின்பான தொடர் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை இத்திட்டத்தின் மூலம் பெறமுடியும். இப்புதிய திட்டத்தின் படி, 950 வகையான நோய்களுக்காக சிகிச்சை பெற முடியும்.