/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த 80 வயது மூதாட்டிகலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த 80 வயது மூதாட்டி
கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த 80 வயது மூதாட்டி
கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த 80 வயது மூதாட்டி
கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த 80 வயது மூதாட்டி
ADDED : செப் 20, 2011 12:34 AM
காஞ்சிபுரம் : தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்காததால், 80 வயது மூதாட்டியுடன், கோர்ட் ஊழியர்கள், கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற, 2002ல் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இப்பணியை வருவாய் துறை மேற்கொண்டது. மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், உண்ணாமலை அம்மாள், 80, என்பவருக்கு சொந்தமான, 108 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவருக்கு, ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு, 27 ரூபாய் 50 பைசா வீதம், 2,920 ரூபாய் மட்டும், இழப்பீடாக வழங்கப்பட்டது. ஒரு சென்ட் நிலத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரி, உண்ணாமலை அம்மாள் செங்கல்பட்டு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த ஆண்டு ஒரு சென்டுக்கு 20 ஆயிரம் ரூபாய், 15 சதவீதம் வட்டியுடன் வழங்கும்படி உத்தரவிட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி, உண்ணாமலை அம்மாள் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த ஜூலை மாதம், வட்டியுடன் 1 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இல்லையெனில், கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், உண்ணாமலை அம்மாள் கடந்த ஜூலை மாதம், கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய, கோர்ட் ஊழியர்களுடன் சென்றார். அப்போது, அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். அதை ஏற்று ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனர். அதன்பிறகும் இழப்பீடு வழங்கப்படவில்லை. மீண்டும் கோர்ட்டுக்கு சென்று, ஜப்திக்கு அனுமதி பெற்றனர். நேற்று பகல் 2 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகஐயர், விரைவில் இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். அதை ஏற்று மீண்டும் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
என்.ஏ.கேசவன்


