/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவி சீட் பெற தலைமையிடத்தில் முகாம்கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவி சீட் பெற தலைமையிடத்தில் முகாம்
கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவி சீட் பெற தலைமையிடத்தில் முகாம்
கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவி சீட் பெற தலைமையிடத்தில் முகாம்
கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவி சீட் பெற தலைமையிடத்தில் முகாம்
ADDED : செப் 20, 2011 09:00 PM
கிள்ளை : கிள்ளை பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டி உள்ளது.
கிள்ளை பேரூராட்சி தற்போது தி.மு.க., வசம் உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்ற தி.மு.க.,வும், ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வுக்குமிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கிள்ளை பேரூராட்சிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே உற்சாகமடையச் செய்துள்ளது. இந்நிலையில் மா.கம்யூ., - தே.மு.தி.க., - காங்., - வி.சி., கட்சிகளும் தங்கள் பங்கிற்கு பேரூராட்சி மீது குறிவைத்து போட்டிக்கு ஆயத்தமாகி எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என கட்சி தலைமையிடத்தில் முகாமிட்டுள்ளனர்.


