ADDED : ஆக 28, 2011 11:31 PM
உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார். முதுகலை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, உடுமலை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரமாதேவி, மருத்துவ சங்க பொருளாளர் ஜான்சி பேசினர். முகாமில், மாணவிகளுக்கு ரத்த சோகை நோய் குறித்து விளக்கப்பட்டது. உதவித்தலைமையாசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.