Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருட்டு சி.டி., பறிமுதல்

திருட்டு சி.டி., பறிமுதல்

திருட்டு சி.டி., பறிமுதல்

திருட்டு சி.டி., பறிமுதல்

ADDED : செப் 19, 2011 01:54 AM


Google News

சென்னை : காப்புரிமை இல்லாமல் தமிழ்த் திரைப்பட சி.டி.,க்களை, போலி நிறுவனங்களின் பெயரில் தயாரித்த நிறுவனத்துக்கு,'சீல்' வைக்கப்பட்டது.

16 ஆயிரம் சி.டி.,க்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, தி.நகர் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ்' நிறுவன மேலாளர் தங்கமணி. இவர், பல தமிழ் படங்களின் திருட்டி சி.டி.,க்கள், போலியான நிறுவனங்களின் பெயரில் தயாரித்து விற்கப்படுவதாக, சமீபத்தில் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இவரது புகாரின்படி, சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள, 'மேக்னா வீடியோ சென்டரில்' பதுக்கி வைக்கப்பட்ட 16 ஆயிரம் உரிமம் இல்லாத சி.டி.,க்கள் கைப்பற்றப்பட்டன. இங்கு தயாரிக்கப்படும் திருட்டு சி.டி.,க்கள், 'மெட்டா ஆடியோஸ்' உள்ளிட்ட பல கடைகள் மூலம் விற்கப்பட்டுள்ளன.

காப்புரிமை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், ராமாபுரத்தைச் சேர்ந்த சண்முகம், 36 மற்றும் திருவான்மியூரைச் சேர்ந்த கான், 30 ஆகியோரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட சி.டி.,க்களின் மொத்த மதிப்பு ஆறு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயாகும். இதன் உரிமையாளரான காஜாமொய்தீன், கோவையில் வீடியோ தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவர், சி.டி.,க்கள் டில்லியில் இருந்து வருவதாக கூறியுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக, கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி கூறியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us