Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அ.தி.மு.க., வசம் தொகுதி: டவுன் பஞ்., மட்டும் ஏமாற்றம்

அ.தி.மு.க., வசம் தொகுதி: டவுன் பஞ்., மட்டும் ஏமாற்றம்

அ.தி.மு.க., வசம் தொகுதி: டவுன் பஞ்., மட்டும் ஏமாற்றம்

அ.தி.மு.க., வசம் தொகுதி: டவுன் பஞ்., மட்டும் ஏமாற்றம்

ADDED : செப் 17, 2011 01:50 AM


Google News
பெருந்துறை:பெருந்துறை தொகுதியை தொடர்ந்து அ.தி.மு.க., கைப்பற்றிய போதும், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து மட்டும் மற்ற கட்சிகள் கையிலேயே உள்ளது. இம்முறை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிப்பதில். அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை 1996ல் காங்கிரஸ், 2001ல் சுயேச்சை, 2006ல் தி.மு.க., வென்றன. பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.,க்களாக அ.தி.மு.க.வினரே தொடர்ந்து பதவிவகித்த போதும், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி மட்டும் எதிர்க்கட்சியினர் வசமே இருந்து வருகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியின் மீது அ.தி.மு.க., கண் வைத்துள்ளது. தலைவர் பதவியை பிடித்து விடுவது என்ற குறிக்கோளுடன் உள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பெருந்துறை டவுன் பஞ்சாயத்து மீது எப்போதும் ஒரு கண். 1996 மற்றும் 2001 தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் பழனிசாமி போட்டியிட்டுள்ளார்.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து ஒதுக்கப்பட்டால் வெற்றி நிச்சம், நீண்ட நாள் கனவு நானவாகும் என்ற கருத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கும் பெருந்துறை டவுன் பஞ்சாயத்து மீது ஒரு கண். பெருந்துறை தாலுக்காவின் தலைமையிடமான, பெருந்துறை டவுன் பஞ்சாயத்து கிடைத்தால், பெருந்துறை நகரமே கிடைத்த மகிழ்ச்சி என்று தே.மு.தி.க. கருதுகிறது.ஆக மொத்தத்தில் பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி மீது, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சியினருக்கும் கண் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us