மணப்பாறையில் சப் கோர்ட் கோரி பொது நல வழக்கு
மணப்பாறையில் சப் கோர்ட் கோரி பொது நல வழக்கு
மணப்பாறையில் சப் கோர்ட் கோரி பொது நல வழக்கு
ADDED : ஆக 08, 2011 02:31 AM
மதுரை:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முகாம் சப்- கோர்ட் அமைக்க கோரிய
மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, இதுகுறித்து பதிலளிக்க பதிவாளர்
ஜெனரல், உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.மணப்பாறை பொது நல அமைப்பு
செயலாளர் வெள்ளைச்சாமி தாக்கல் செய்த பொது நல வழக்கு:
மணப்பாறையில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மாவட்ட முன்சீப் கோர்ட்டுகள் இரு
கி.மீ., தூரத்தில் தனித்தனி கட்டடத்தில் இயங்குகின்றன.
வக்கீல்கள் இரு
கோர்ட்டுகளுக்கும் அலைய வேண்டியுள்ளது. மணப்பாறை தாலுகா பகுதியிலிருந்து
ஏராளமான சிவில் வழக்குகள் திருச்சி சப் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.
இதற்காக திருச்சி சென்று வர வேண்டியுள்ளது. திருச்சி நீதிபதிகள்
மணப்பாறையில் முகாமிட்டு வழக்குகளை விசாரிக்க முகாம் சப் கோர்ட் அமைக்க
கோரி உள்துறை செயலாளருக்கு மனு செய்யப்பட்டது. அவர், மனுவை ஐகோர்ட்
பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பினார். நடவடிக்கை இல்லை. மணப்பாறையில் முகாம்
சப்- கோர்ட் அமைக்க உத்தரவிட வேண்டும், என கோரினார்.வழக்கு நீதிபதிகள்
ஜனார்த்தராஜா, சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
வக்கீல்கள் ஜானகிராமுலு, பத்மாவதி, ''திருச்சி சப் கோர்ட்டுகளில் மணப்பாறை
பகுதியிலிருந்து இழப்பீடு, திருமணம் மற்றும் மேல்முறையீடு மனுக்கள் உட்பட
2, 158 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து தீர்க்க முகாம் சப்
கோர்ட் அமைக்க வேண்டும்,'' என்றனர். இதுகுறித்து பதிலளிக்க பதிவாளர்
ஜெனரல், உள்துறை மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.


