/உள்ளூர் செய்திகள்/கரூர்/செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழாசெல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
ADDED : செப் 19, 2011 12:26 AM
வேலாயுதம்பாளையம்: கூலக்கவுண்டனுர் பாலத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ
விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
புஞ்செய் புகளூர்
கிராமம் வடபாகம் வேலாயுதம்பாளையம், கூலக்கவுண்டனுர் பகுதியில் அமைந்துள்ளது
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில். தற்போது கோவில் புணரமைப்பு செய்யப்பட்டு
நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா கணபதி
ஹோமம், காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால
யாக பூஜை, திரவியயாகம், சிவாச்சாரியாளர்கள் சுவாமிகள் வழிபாடு, இரண்டாம்
காலயாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜை நடந்தன.
நேற்று 16 ம் தேதி காலை 6 மணிக்கு நான்கால யாக பூஜை, திரவிய யாகம், 7.30
மணிக்கு மேல் விநாயகர், விமானம் மூலஸ்தான கும்பாபிஷேகத்தை புகழிமலை சிவஸ்ரீ
சந்திரசேகர சிவாச்சாரியார் செய்திருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.