/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனூரில் மணல் அள்ளிய வழக்கில் மேலும் ஒருவர் கைதுமாயனூரில் மணல் அள்ளிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
மாயனூரில் மணல் அள்ளிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
மாயனூரில் மணல் அள்ளிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
மாயனூரில் மணல் அள்ளிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : அக் 08, 2011 03:25 AM
கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றுப்பகுதியில் அரசு புறம்போக்கு
நிலத்தில் அனுமதியில்லாமல் மணல் அள்ளியதாக அரவக்குறிச்சி தி.மு.க.,
எம்.எல்.ஏ., பழனிசாமி, சுந்தரேசன், கிரிராஜ், ரவிராஜா, ராஜா, சசிகுமார்,
குமார் ஆகிய ஏழு பேர் மீது மாயனூர் (பொ) வி.ஏ.ஓ., நீலமேகம் கடந்த மாதம் 14
ம் தேதி போலீஸில் புகார் செய்தார்.இதையடுத்து எம்.எல்.ஏ., பழனிசாமியை கடந்த
மாதம் 19ம் தேதி போலீஸார் கைது செய்து, குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள மற்ற ஆறு பேரையும் தனிப்படை போலீஸார்
தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு கிருஷ்ணராயபுரம் அருகே
சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த சுந்தரேசனை, இன்ஸ்பெக்டர் சுப்பையா
தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
வாங்கல் நெரூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி
பெறாமல் மணல் அள்ளியதாக எம்.எல்.ஏ., பழனிசாமி மீது போடப்பட்ட இரண்டாவது
வழக்கிலும் சுந்தரேசன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.


