/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தாமிரபரணி நீரை ஒதுக்கிய நகராட்சி :மக்கள் அதிருப்தியால் கவுன்சிலர்கள் கலக்கம்தாமிரபரணி நீரை ஒதுக்கிய நகராட்சி :மக்கள் அதிருப்தியால் கவுன்சிலர்கள் கலக்கம்
தாமிரபரணி நீரை ஒதுக்கிய நகராட்சி :மக்கள் அதிருப்தியால் கவுன்சிலர்கள் கலக்கம்
தாமிரபரணி நீரை ஒதுக்கிய நகராட்சி :மக்கள் அதிருப்தியால் கவுன்சிலர்கள் கலக்கம்
தாமிரபரணி நீரை ஒதுக்கிய நகராட்சி :மக்கள் அதிருப்தியால் கவுன்சிலர்கள் கலக்கம்
ADDED : செப் 23, 2011 11:20 PM
ராஜபாளையம் : ''தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தேவை இல்லை,'' என,
நகராட்சி கூட்டத்தில் ஒதுக்கியதால், இதன் அதிருப்தி தேர்தலில் வெளிபடும்
என்பதால், போட்டியிட வுள்ள கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் தான் ராஜபாளையம் குடிநீருக்கு
ஆதாரமாக உள்ளது. மலையடிவாரத்தில் கோடைகால குடிநீர் தேக்கத்தில்
சேமிக்கப்படும் மழைநீர், சுத்திகரிக்கப்பட்டு ராஜபாளையத்திற்கு சப்ளை
செய்யப்படுகிறது. தற்போது மழையின்மையால் நீர்தேக்கம் வறண்ட நிலையில்
உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, தனியார் குடிநீர்
நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதன்
பிரச்னை தீர்க்க, பலகோடி ரூபாயில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி
நடந்தது. இதுவும் கடந்த இரண்டு ஆண்டுகள் முன் நின்றுவிட்டது. ராஜபாளையத்தை
கடந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தாமிரபரணி குடிநீர் செல்லும் நிலையில்,
தாமிரபரணி குடிநீர் தேவை இல்லை என, ராஜபாளையம் நகராட்சி கவுன்சில்
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒதுக்கினர். இதன் காரணமாக
ராஜபாளையத்திற்கு தாமிரபரணி குடிநீர் கிடைக்காமல் போனது. இது மக்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் அதிருப்தி நடக்க உள்ள உள்ளாட்சி
தேர்தலில் வெளிப்படும் என்பதால், தற்போதைய கவுன்சிலர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.