Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாட்டில் லஞ்சம் மலிந்து விட்டது: ஐகோர்ட் நீதிபதி வேதனை

நாட்டில் லஞ்சம் மலிந்து விட்டது: ஐகோர்ட் நீதிபதி வேதனை

நாட்டில் லஞ்சம் மலிந்து விட்டது: ஐகோர்ட் நீதிபதி வேதனை

நாட்டில் லஞ்சம் மலிந்து விட்டது: ஐகோர்ட் நீதிபதி வேதனை

ADDED : அக் 09, 2011 01:42 AM


Google News

மதுரை : ''கிராமங்களில் கூட பணம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை.

நாட்டில் லஞ்சம் மலிந்து விட்டது,'' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி டி.முருகேசன் வேதனை தெரிவித்தார். மதுரை மாவட்ட கோர்ட்டில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கோர்ட் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைமை நீதிபதி ராஜசேகரன் (பொறுப்பு) வரவேற்றார். புதிய கோர்ட்டை திறந்து வைத்து நீதிபதி முருகேசன் பேசியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகரை உள்ளடக்கிய மாவட்டங்களில் 168 லஞ்ச வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிய கோர்ட் 80 வழக்குகளை விசாரிக்கும். கிராமங்களில் கூட பணம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. நாட்டில் லஞ்சம் மலிந்து விட்டது. லஞ்சம் கொடுப்பதை, வாங்குவதை தடுக்க ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். மதுரை, கோவையை அடுத்து சென்னை, திருச்சியில் இக்கோர்ட்டுகள் திறக்கப்படவுள்ளன. 125 நீதிபதி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார். கலெக்டர் சகாயம் பேசுகையில், ''ஊழலும், சமூகமும் பிணைந்துள்ளன. நாமக்கல்லில் கலெக்டராக இருந்தபோது பைக்கில் இருவர் தாறுமாறாக சென்றனர். அவர்களை நிறுத்த செய்து லைசென்ஸ் கேட்டேன். அவர்கள், எனக்கு ரூ.100 லஞ்சம் தர முயன்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினேன். லஞ்சத்தை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை,'' என்றார். நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ஏ.கே.ராமசாமி, பொம்மையன், சுப்பிரமணியன், மாவட்ட தலைமை நீதிபதியின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். தலைமை மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us