Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விளையாட்டுக்கு உலை வைக்கும் ஊக்கமருந்து :கோவையில் கால்பதிக்கும் அபாயம்

விளையாட்டுக்கு உலை வைக்கும் ஊக்கமருந்து :கோவையில் கால்பதிக்கும் அபாயம்

விளையாட்டுக்கு உலை வைக்கும் ஊக்கமருந்து :கோவையில் கால்பதிக்கும் அபாயம்

விளையாட்டுக்கு உலை வைக்கும் ஊக்கமருந்து :கோவையில் கால்பதிக்கும் அபாயம்

ADDED : ஜூலை 13, 2011 10:12 PM


Google News
கோவை : கோவையில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தினார் களா என சந்தேகம் எழுந்துள்ளது.

நேரு விளையாட்டரங்கின் கழிப்பிட வளாகத்தில் நேற்று ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் விளையாட்டு அமைப்புகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 11,12 தேதிகளில் நேரு விளையாட்டரங்கில் நடந்தன. மாவட்டம் முழுவதுமிருந்து பல்வேறு விளையாட்டு அமைப்புகள், பள்ளி, கல்லூரிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகளின்போது, மாணவர்கள் சிலர் விளையாட்டில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் நேற்று கண்டறியப்பட்டன. விளையாட்டரங்கின் உட்புறம் உள்ள ஆண்கள் கழிப்பறையின் அருகில், யோகா அரங்குக்கு மேல் செல்லும் படிக்கட்டில் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய ஏழுக்கும் மேற்பட்ட, 'டிஸ்போவன்' எனப்படும் ஊசிகள், புதிதாக கிழிக்கப்பட்ட உறைகளுடன் கிடந்தன. இது ஊக்கமருந்து செலுத்த பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜ மகேந்திரன் கூறுகையில்,''ஊக்கமருந்து பயன்பாடு என்பது தவறான வழி. இது ஆரோக்கியமான விளையாட்டை சீர்குலைக்கும் விஷயம். பயிற்சியாளர்களுக்குத் தெரியாமல் எந்த வீரரும் ஊக்கமருந்து பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக, மாவட்ட தடகள சங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். மாவட்ட தடகள சங்கப் பொருளாளர் மாணிக்கம் கூறுகையில்,''கோவையில் ஊக்கமருந்து பயன்பாடு புதிதாக உள்ளது. இம்மாதிரியான புகார்கள் இதுவரை வந்ததில்லை. கோவை வீரர்களும் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குவோம். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமலிருக்க சரியான விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். மனநல மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி கூறியதாவது: விளையாட்டு வீரர்கள் தங்கள் வெற்றிக்காக, உடலில் தற்காலிகமாக அதிக சக்தியையும், திறனையும் ஏற்படுத்திக்கொள்ள ஊக்கமருந்து எடுக்கின்றனர். இது அவர்கள் உடல் நலத்தை தாங்களே கெடுத்துக்கொள்ளும் செயல். சந்தையில் தற்போது எண்ணற்ற வகை ஊக்கமருந்துகள் சாதாரணமாக கிடைக்கின்றன. அவற்றில் 'அனாபாலிக் ஸ்டீராய்டு', 'சைக்கே ஸ்டெமுலென்ஸ்' ஆகியன அதிக வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆபத்துக்கே வழிவகுக்கும்,'' என்றார். நமது இந்திய தடகளத்தை சமீபத்தில் உலுக்கி வரும் ஒரு விஷயம் ஊக்கமருந்து சர்ச்சை. தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு. ஏ.டி.ஏ.,) தடகள வீரர், வீராங்கனைகளிடம் நடத்திய சோதனையில், தேசிய அளவில் எட்டு பேர் பிடிபட்டனர். இந்த ஊக்கமருந்து கலாசாரம் தற்போது கோவையிலும் தடகள வீரர்கள் இடையே பரவியுள்ளதா என்ற கேள்வியே, அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us