ADDED : ஜூலை 11, 2011 01:09 AM
மதுரை: மதுரை அமுதசுரபி கலைமன்றம் சார்பில், மாணவியருக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ராஜ்மகால் ஜவுளி கடை உரிமையாளர் முருகானந்தம், சவுராஷ்டிரா பள்ளி தாளாளர் ஏ.கே. ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் கந்தசாமி வரவேற்றார். தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் அண்ணாதுரை, சுந்தரராஜன், போஸ் ஆகியோர் இலவச பொருட்களை வழங்கினர். முன்னாள் எம்.பி., ராம்பாபு, தலைமையாசிரியர் சவுந்திரராஜன், டாக்டர் சங்கரமகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.