Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிடைக்கலை... கிடைக்கலை... "தம்' ஒண்ணு கிடைக்கலை : வியாபாரிகள் பதுக்கல்; புகை பிரியர்கள் அவதி

கிடைக்கலை... கிடைக்கலை... "தம்' ஒண்ணு கிடைக்கலை : வியாபாரிகள் பதுக்கல்; புகை பிரியர்கள் அவதி

கிடைக்கலை... கிடைக்கலை... "தம்' ஒண்ணு கிடைக்கலை : வியாபாரிகள் பதுக்கல்; புகை பிரியர்கள் அவதி

கிடைக்கலை... கிடைக்கலை... "தம்' ஒண்ணு கிடைக்கலை : வியாபாரிகள் பதுக்கல்; புகை பிரியர்கள் அவதி

ADDED : ஜூலை 13, 2011 10:59 PM


Google News

சிகரெட் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு, தமிழக அரசு விற்பனை வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இதனால், சென்னையில் பெரும்பாலான இடங்களில், சிகரெட் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிப்தியடைந்துள்ளனர்.கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கடன் ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். கடனில் இருக்கும், தமிழக நிர்வாகத்தை சீரமைக்க வருவாயை அதிகரிக்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு வருவாயை பெருக்கும் வகையில், இலவச ஆடு, மாடுகளும் தமிழக அரசு வழங்க உள்ளது.



மாணவர்களுக்கு இலவச லேப் - டாப் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதாலும், இருக்கும் கடனை அடைத்து, வருவாயை பெருக்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு பொருட்களுக்கான விற்பனை வரியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான விற்பனை வரி, 12.5 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக்கப்பட்டுள்ளது. இதனால், சிகரெட் விற்பனை விலையிலும் மாற்றங்கள் செய்ய கம்பெனிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.சில்லறை விற்பனைக் கடைகள், மாவட்ட வினியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் என அனைவரும், தமிழக அரசின் உத்தரவை பயன்படுத்தி, ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருக்கும், சிகரெட் சரக்குகளுக்கு அதிக விலை வைத்து விற்க திட்டமிட்டுள்ளனர்.புகையிலை நிறுவனங்கள், புதிய விற்பனை விலையை அறிவிக்கும் வரை, சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்கனவே தாங்கள் பழைய விலைக்கு வாங்கிய சிகரெட் பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்து, புதிய விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர்.இதனால், சென்னை முழுவதும், அனைத்து பெட்டிக்கடைகள் மற்றும் சிகரெட் விற்பனைக் கடைகளில் சிகரெட்கள் கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.



இதுகுறித்து, சிகரெட் பிடிக்கும் வாடிக்கையாளர், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் கூறும்போது, ''சிகரெட் விற்பனை விலையை அரசு உயர்த்தி விட்டதால், உடனடியாக கடைக்காரர்கள் சிகரெட்களை பதுக்கி விட்டனர்.

புதிய விலையை இனிமேல் தான் கம்பெனிகள் அறிவிக்கும், அல்லது விலையை உயர்த்தாமல் கூட இருக்கலாம். ஆனால், சிகரெட்டுக்கு செயற்கை பற்றாக்குறையை கடைக்காரர்கள் உருவாக்கி விட்டனர். புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றலாம் என்றால், புகை விடக்கூட முடியாமல், கடைக்காரர்கள் கூடுதலாக புண்படுத்துகின்றனர்'' என்றார்.சிகரெட் தவிர, இதர புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் போன்றவற்றின் விலையும் நேற்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.நல்ல நோக்கத்திற்காக விற்பனை வரியை அரசு உயர்த்தினாலும், அது அரசுக்கு போய்சேருவதற்கு முன்பாக, பதுக்கல் வியாபாரிகளுக்கு சென்று சேர்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us