"கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்.எஸ்.எஸ்.,'
"கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்.எஸ்.எஸ்.,'
"கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்.எஸ்.எஸ்.,'
ADDED : செப் 27, 2011 06:31 PM
கோவை: அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவி ரேவதி வரவேற்றார். மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியப்பெருமாள் தலைமை வகித்து பேசுகையில்,''மகளிர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது பெருமைக்குரிய விஷயம். ''கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமுதாய முன்னேற்றத்துக்கு தன்னை அற்பணிப்பதன் மூலம் சமுதாயம் மேம்படுவதுடன் தனித்திறமையும் வெளிப்படுத்தப்படும். இது போன்ற சேவைகள் செய்வதன் வாயிலாக தலைமைப்பண்பும் வளர்ச்சியடையும், செயல் திறனும் அதிகரிக்கும்,'' என்றார்.
பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்து பேசியதாவது: மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட பணிகளில் ஈடுபடுவதன் மூலம் சமூகத்துக்கு பணிபுரிய அரிய வாய்ப்பு கிடைக்கிறது. தன்னலமற்ற சேவை மனப்பான்மையானது கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு <உதவிபுரிகிறது. பல்கலை, பள்ளிகள், கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்., துறைகளின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்று. இப்பல்கலையில், என்.எஸ்.எஸ்., மாணவர்களின் எண்ணிக்கை 2,758 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாணவர்களின் ஆர்வமும், விடாமுயற்சியுமே. கிராமங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதில் நாட்டு நலப்பணி திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனா, ஜப்பான், தாய்வான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதுடன், தேசத்தின் முக்கிய தினங்களில் பல்கலை மாணவர்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் என்.எஸ்.எஸ்., தினம் தான். படிக்கும் வயதில் சமுதாயத்துக்கு தன்னை அர்ப்பணிப்பது பாராட்டுக்குரிய விஷயம். இது மேலும் தொடர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பதிவாளர் கவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.