ADDED : ஜூலை 25, 2011 09:43 PM
பீஜிங்: திபெத்தில் முதன் முறையாக மாகாண வங்கி ஒன்றைத் திறக்க சீன வங்கி ஒழுங்குமுறைக் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்த வங்கியில் துவக்க முதலீடாக, 233 மில்லியன் டாலர் (1,035 கோடி ரூபாய்) வைக்கப்படும். இது திபெத்தின் முதல் மண்டல தனியார் வங்கியாக இருக்கும். மாகாண அரசு உள்ளிட்ட 15 நிறுவனங்கள் இந்த வங்கிக்கு நிதியுதவி அளிக்கும். திபெத்தில் ஏற்கனவே சீன வர்த்தக வங்கிகளின் ஐந்து கிளைகள், செயல்பட்டு வருகின்றன.