ADDED : செப் 04, 2011 12:44 AM
சேலம்: தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப்(மலையாளி) பேரவையின் சேலம் தாலுகா கிளை கூட்டம், வை.தாதனூர் கிராமத்தில் நடந்தது.
தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வை.தாதனூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். தாட்கோ மூலம், மலையாளி மக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிச்சான்று பெற தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்றால் புரோக்கர் ஆதிக்கம் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொளத்தூர் பகுதியில் ரெட்டியார் சமூகத்தினர் எஸ்.டி. சான்றிதழ் கேட்பது குறித்து மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன் சட்டசபையில் பேசியுள்ளார். அதற்கு மலையாளி பேரவை சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.