/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சவுடு மண் லாரி மோதி குழந்தை காயம்: ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்சவுடு மண் லாரி மோதி குழந்தை காயம்: ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்
சவுடு மண் லாரி மோதி குழந்தை காயம்: ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்
சவுடு மண் லாரி மோதி குழந்தை காயம்: ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்
சவுடு மண் லாரி மோதி குழந்தை காயம்: ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்
ADDED : அக் 03, 2011 10:54 PM
ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அருகே, சவுடு மண் ஏற்றிய லாரி குழந்தை மீது மோதிய சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரியபாளையம் அடுத்த, ஆரணி ஏரியில் சவுடு மண் எடுக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் சவுடு மண் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, ஆரணியில் சென்று கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இரண்டு வயது குழந்தை மீது மோதியது.இதில், குழந்தையின் இரண்டு கால்கள் காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஆரணி போலீசார் விசாரித்ததில், அந்த குழந்தை ஆரணி அடுத்த, ஆமிதாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மகன் சஞ்சய்,2, என்பது தெரிய வந்தது.
சாலை மறியல்: திருவள்ளூர் அடுத்த, வெள்ளியூரில் சவுடு மண் ஏற்றி வந்த லாரி மோதி, 5 மாணவர்கள் பலியான சம்பவம் மறக்காத நிலையில், ஆரணியில் நடந்த சம்பவம், பொது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தையடுத்து, ஆரணி - சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் பிரசன்னா, டி.எஸ்.பி., பாரதி, பொன்னேரி துணை தாசில்தார் சித்ரா ஆகியோர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; சவுடு மண் குவாரியை நிறுத்த வேண்டும்; பள்ளி நேரங்களில், காலை, மாலை வேளைகளில், ஆரணி - சென்னை சாலையில் மணல் லாரிகள் செல்லக் கூடாது என்றனர்.மேலும், பொதுமக்கள் குவாரி நடந்த இடத்திற்குச் சென்று, வழித்தடங்களில் தடுப்புகள் போட்டனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கிறோம் என, அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.


