அன்பழகன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு தள்ளுபடி
அன்பழகன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு தள்ளுபடி
அன்பழகன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு தள்ளுபடி
உடுமலை : காகித ஆலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் ஜாமின் மனுவை, மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த 29ம் தேதி நள்ளிரவு சென்னையில், அன்பழகன் எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டார்; 30ம் தேதி உடுமலை ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். எம்.எல்.ஏ., தரப்பில், உடல் நலக்குறைவை காரணம் கூறி ஜாமின் வழங்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மாஜிஸ்திரேட் மறுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் அன்பழகன் அடைக்கப்பட்டார்.
கடந்த 1ம் தேதி, ஜாமின் மனுவுக்கு விளக்கம் கேட்டு மாஜிஸ்திரேட் தீபா, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஜாமின் மனு குறித்த விசாரணை நேற்று நடந்தது.
'அன்பழகனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என, குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தீபா, அன்பழகன் எம்.எல்.ஏ., ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.