வால்பாறையில் காட்டு யானை அட்டகாசம்!
வால்பாறையில் காட்டு யானை அட்டகாசம்!
வால்பாறையில் காட்டு யானை அட்டகாசம்!
UPDATED : ஜூலை 28, 2011 08:51 AM
ADDED : ஜூலை 27, 2011 11:32 AM
வால்பாறை: வால்பாறை அருகே அட்டகாசம் செய்த காட்டு யானையை, 8மணி நேரத்திற்கும் மேலாக போராடி, காட்டு பகுதிகளுக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
வால்பாறை அருகே உள்ளது நடுமலை ஸ்டேட். இங்கு நேற்று இரவு 11மணியளவில் காட்டு யானை ஒன்று, குட்டியுடன் வந்து, அந்தபகுதி முழுவதும் அட்டகாசம் செய்தது. இதில் அங்குள்ள மஸ்தூர் அலுவலகத்தை இடித்து தள்ளியது. அலுவலகத்தில் இருந்த கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் வீசி எறிந்தது. யானையின் அட்டகாசம் அதிகமாக வனத்துறையினருக்கு, அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். வனத்துறையினரும், அப்பகுதியினரும் காட்டு யானையை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். சுமார் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், ஒருவழியாக இன்று காலை 7மணிக்கு காட்டுபகுதிக்குள் யானையை விரட்டியடித்தனர். காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் அப்பகுதியினர் தொடர்ந்து பீதியில் உறைந்து போய் உள்ளனர்.